லவ் ஜிகாத்.. மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் இளம்பெண்… கதறும் தாய்!!

117

சமீபகாலமாக பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் கல்ஷாஹித் தானா பகுதியில் கணவர் சித்ரவதை செய்ததாக கூறி பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

மும்பையில் இருந்து வந்த பெண்ணின் தாயார் மாதுரி மித்ரா, “முகமது புஜைல் – ஹர்ஷதாவை திருமணம் செய்துகொண்டார். அவரின் பெயரை பாத்திமா என மாற்றி அவரை இஸ்லாம் மதத்திற்கு மாறச் செய்துள்ளார்.

மும்பையின் சிவப்பு விளக்கு பகுதியில் ஃபுசைல் டிஃபின் சப்ளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஹர்ஷதா ஏற்கனவே திருமணமானவர். அவரது முதல் கணவரை விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது.

பப்ஜியில் சந்தித்த பிறகு ஃபுசைலும் ஹர்ஷதாவும் நெருங்கி பழகினாலும் அவரின் தாய், இவர்களின் உறவுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஹர்ஷதாவின் தாயாரிடம், ஹர்ஷதா தன்னை அடித்ததாக ஃபுசைல் குற்றம் சாட்டியுள்ளார்.

2 நாட்களுக்கு முன்பு ஃபுசைலும் தனக்கு போன் செய்து, ஹர்ஷதா தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்தாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியதாக ஹர்ஷதாவின் அம்மா கூறினார்.

உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்ற ஹர்ஷதாவின் தாய், மகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அழுது கொண்டே கூறினார்.


இது குறித்து அவரின் தாய், “நான் காட்கோபரில் வசித்து வருகிறேன். என் மகளுக்கு முதல் திருமணம் செய்து சில நாட்களிலேயே விவாகரத்து செய்துவிட்டாள். PUBGல் இருந்த போது ​​ஃபுசைலைக் காதலித்தாள். ஆரம்பித்திலேயே இதெல்லாம் ஒத்து வராது எனக் கூறினேன்.

ஆனால் அவள் அதை விரும்பவில்லை. பின்னர் என் மகள் ஃபுசைலை திருமணம் செய்து கொண்டாள் என எங்களுக்குத் தகவல் கிடைத்தது. தற்போது தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறிய போது மருத்துவமனையில் தான் மீண்டும் அவளை பார்த்தேன்.

அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது