147 கோடி பரிசாக…
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு லொட்டரியில் 20 மில்லியன் டொலர் பரிசாக கிடைத்துள்ளது. டிசம்பர் 17-ல் நடத்தப்பட்ட பவர்பால் ஜாக்பாட் என்ற லொட்டரியிலேயே அதிர்ஷ்டம் அந்த மாணவனை தேடி வந்துள்ளது.
இனி கல்வியும் தற்போது செய்து வரும் வேலையையும் விட்டுவிட வேண்டும் என தெரிவித்துள்ள அந்த மாணவன், எஞ்சிய காலம் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
வியாழனன்று இரவு லொட்டரியில் பரிசு விழுந்ததாக தமக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், இவ்வளவு பெரிய தொகை என்பதை அறிந்ததும் நம்ப முடியவில்லை எனவும்,
உடனையே பெற்றோருக்கு தகவல் தர அழைத்த போது அவர்கள் தூக்கத்தில் இருந்ததால் விடிந்ததும் தகவல் தெரிவித்ததாக கூறியுள்ளார். தமக்கு ராசியான 13-ல் தொடங்கும் இலக்கங்கள் கொண்ட லொட்டரியை வாங்கியதாக கூறும் மாணவன்,
விற்பனை முடிவுக்கு வர சில நிமிடங்கள் எஞ்சிய நிலையிலேயே தாம் முடிவெடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். குடும்ப உறுப்பினர்களும் நெருங்கிய நண்பர்களும் இந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர்.
அவர்களுக்கு உதவுவதே முக்கிய இலக்கு என குறிப்பிட்டுள்ள பெயர் வெளிப்படுத்தாத அந்த மாணவன், எஞ்சிய காலம் தமக்கு பிடித்தது போன்று ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.