வடிவேலு குறித்து பேசக்கூடாது.. நடிகர் சிங்கமுத்துவுக்கு அதிரடி உத்தரவு!!

111

நடிகர் வடிவேலு குறித்து அவதூறாக பேசக்கூடத்து என நடிகர் சிங்கமுத்துவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து பல யூடியூப் சேனல்களில் நடிகர் வடிவேலு குறித்து பேசி வந்தார். இதற்கு வடிவேலு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அத்துடன் அவர் மீது அவதூறு வழக்கும் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில், நீதிமன்றத்தில் இவ்வழக்கினை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. ஆனால், யூடியூப்பில் சிங்கமுத்து தரப்பில் தங்களைப் பற்றி தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார்கள் என்று வடிவேலு தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

அடுத்து சிங்கமுத்து தரப்பில், அவ்வாறு எந்த நேர்காணலும் கொடுக்கவில்லை என்றும், தங்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால், வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 14ஆம் திகதிக்கு தள்ளி வைத்தார். மேலும், வடிவேலு குறித்து எந்த அவதூறு கருத்தும் சிங்கமுத்து தெரிவிக்ககூடாது என்றும், ஏற்கனவே சிங்கமுத்து கூறியது யூடியூப்பில் இருப்பதால் அதனை நீக்குமாறு குறிப்பிட்ட சேனலுக்கு கடிதம் எழுமாறும் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.