அமெரிக்க இளம்பெண் ஒருவர் ஐ.எஸ் அமைப்பின் தலைவனாக இருந்த அபு பக்கர் அல் பாக்தாதியால் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தங்களுக்கு தெரியும் என பிரித்தானியாவிலிருந்து சென்று ஐ.எஸ் அமைப்பில் இணைந்த இருவர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்றுடன் சிரியாவில் பணிபுரிந்துகொண்டிருந்த அமெரிக்க இளம்பெண்ணான Kayla Mueller 2013ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பால் கடத்தப்பட்டார்.
5 மில்லியன் யூரோக்கள் பிணைத்தொகை கொடுக்காவிட்டால், Kaylaவின் உயிரற்ற உடலின் புகைப்படம் அனுப்பிவைக்கப்படும் என அவரது குடும்பத்தாருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அவர் ஐ,எஸ் அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டிருந்தபோது, அந்த அமைப்பின் முன்னாள் தலைவனான பாக்தாதி Kaylaவை வன்கொடுமை செய்துள்ளான்.
அவனை பிடிக்க அமெரிக்க படையினர் நெருங்குவதை அறிந்ததும் பாக்தாதி தற்கொலை செய்துகொண்டான். இதற்கிடையில், பிரித்தானியாவிலிருந்து சென்று ஐ.எஸ் அமைப்பில் இணைந்த Alexanda Kotey மற்றும் El Shafee Elsheikh என்னும் இருவர், முன்பு தங்களுக்கு Kaylaவை சந்தித்ததேயில்லை என்று கூறிவந்த நிலையில், தற்போது, Kayla வன்கொடுமை செய்யப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
Kotey மற்றும் Elsheikh ஆகிய இருவரும் தற்போது ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தின் பிடியில் இருக்கும் நிலையில், இருட்டறையில் தனிமையாக அடைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் Kayla மிகவும் பயந்திருந்தாள் என்று கூறியுள்ளான் Elsheikh.
Kotey மற்றும் Elsheikh ஆகிய இருவரையும் அமெரிக்கா கொண்டுவந்து விசாரிக்க முயன்றுவரும் நிலையில், அவர்களுக்கு அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்பதால் பிரித்தானியா அவர்களுக்கெதிராக சாட்சியமளிக்க மறுத்துள்ளதால் வழக்கில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று Kaylaவின் பெற்றோர் உட்பட Kotey மற்றும் Elsheikh ஆகிய இருவரால் பாதிக்கப்பட்ட அனைவரின் உறவினர்களும் குற்றவாளிகள் இருவரையும் அமெரிக்கா கொண்டு வந்து விசாரிக்க,
வெளிப்படையாக பத்திரிகை ஒன்றில் கோரிக்கை வைத்துள்ளனர்.