தூத்துக்குடியில்..
தூத்துக்குடியில் உள்ள மத்திய அரசு தொழிற்சாலையில் பணிபுரியும் 35 வயது நபர் ஓரினச்சேர்க்கையாளர் டேட்டிங் செயலியில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இதையடுத்து கடந்த வாரம் அவரிடம் பேசிய வாலிபர் ஒருவர் அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்தார். அவரும் அதற்கு சம்மதித்தார்.இதையடுத்து, இருவரும் தூத்துக்குடி முத்தையாபுரம் காட்டுப்பதியில் சந்தித்து பேச முடிவு செய்தனர். இதையடுத்து மத்திய அரசு ஊழியர் அங்கு சென்றார்.
அங்கு அவருக்காக காத்திருந்த கும்பல் அவரை மிரட்டி கூகுள் பே மூலம் செல்போன், பணம் மற்றும் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது. இது குறித்து அரசு ஊழியர் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்தனர்.
இதையடுத்து, டேட்டிங் ஆப்பில் மோசடி கும்பல் கொடுத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். திருப்பூர் விக்னேஷ் நகரைச் சேர்ந்த சார்லஸ் மகன் அஷ்வின் (20), முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் மகாராஜா என்கிற சுல்லான் (21), 16 வயது சிறுவன் ஆகியோர் பணம், நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது தூத்துக்குடி டவுன் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். அதே ஆப் மூலம் அவரை தொடர்பு கொண்ட கும்பல், அவரை தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள கொட்டகைக்கு வரவழைத்து தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றது.
இதேபோல் விளாத்திகுளத்தை சேர்ந்த ஒருவரையும் இந்த கும்பல் மிரட்டி பணம் பறித்தது. இந்த வழிப்பறி சம்பவங்கள் தொடர்பாக மேலும் 4 வாலிபர்களை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் ஓரினச்சேர்க்கையாளர்களை குறிவைத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.