ஈரோடு மாவட்டம்..
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் இந்திராணி சோபிகா. இவருக்கு இன்று புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூரில் விபச்சாரம் நடப்பதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.
கிடைத்த அந்த இரகசிய தகவலை அடுத்து சக போலீசாரின் படையை திரட்டி சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். ஆனால் அந்தப் பகுதியில் எல்லாம் சகஜமாக தென்பட்டது. சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் எந்தவித சம்பவமும் அங்கு நடப்பது போன்று இருந்தது.
இருப்பினும் இன்ஸ்பெக்டர் இந்திராணி கோபிகாவுக்கு கிடைத்த ரகசிய தகவலில் ஆணித்தரமாக அந்த பகுதியில் விபச்சாரம் நடப்பதாக கூறப்பட்டது. சற்றும் தளராத இன்ஸ்பெக்டர் மேலும் அப்பகுதியில் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு உள்ள ஒரு வீட்டில் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கணுவுக்கரையைச் சேர்ந்த விஜயகுமார் (45) மற்றும் அவருடைய மனைவி மேனகா (38) ஆகிய இருவரும் வீட்டில் வைத்து விபச்சாரம் செய்து வந்தது தெரியவந்தது.
அவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த வெடியரசம்பாளையம் மாதேஸ்வரன் கோவில் அருகே உள்ள ராஜேந்திரன் மனைவி கலைவாணி என்ற பெண்ணை வைத்து விபச்சாரம் செய்து வந்தனர்.
அந்த சமயத்தில் அங்கு பெயர் விலாசம் தெரியாத நபருடன் அவர் இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து விஜயகுமாரையும் அவரது மனைவி மேனகாவையும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் கைது செய்தனர். மேலும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட அந்தப்பெண் கலைவாணியை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.