விமான விபத்தில் பலியான தாய்-மகள்! வெளிநாட்டில் இருந்து வந்தும் இறுதிசடங்கில் கலந்து கொள்ள முடியாத கணவன்?

379

கேரள விமான விபத்தில் தாய் மற்றும் மகள் உயிரிழந்த சம்பவத்தில், அவர்களின் இறுதிச்சடங்கில் தந்தை கலந்து கொள்ள முடியாது என்று கூறப்படுகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில், நடந்த விமான விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

இந்த விமான விபத்தில் ரெம்யா என்பவரும், அவரின் மகள் Shivathmika-வும் பரிதாபமாக உயிரிழந்தனர். இருப்பினும் ரெய்யாவின் மகன் Yadhudev அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து சம்பவத்தை அறிந்தவுடனே குழந்தைகள் மற்றும் மனைவியைப் பற்றி எந்த ஒரு உறுதியான தகவலும் கிடைக்காததால், துபாயில் பணி புரிந்து வந்த கணவர் முரளிதரன் உடனடியாக மறுநாளே விமானத்தில் காலிகட்டுக்கு பறந்தார்.


இருப்பினும் இவரால் மனைவி மற்றும் மகளின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாது என்று கூறப்படுகிறது. ஏனெனில் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர், அப்படி இருக்க 16-ஆம் திகதி நடைபெறும் இறுதிச்சடங்கில் இவர் கலந்து கொள்ள முடியாது என்று கூறப்படுகிறது.

இது குறித்து ரெம்யாவின் உறவினர் ஒருவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு, விபத்து நடந்த மறுநாளே முரளிதரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பற்றிய தகவல்களைப் பெற முடியாததால் காலிகட்டுக்கு பறந்தார்.

மனைவி மற்றும் மகள் உயிரிழந்த நிலையில், தனது மகனைப் பற்றி மிகவும் கவலைப்பட்டாலும், முரளிதரனால் அவரை மருத்துவமனையில் பார்க்க முடியாது .

இதில், துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால், விமான விபத்து நடந்த மறுநாளிலேயே முரளிதரன் தனது குடும்பத்தினருக்காக பறந்து வந்தாலும்,

அவர் தனிமைப்படுத்தப்படுவதன் காரணமாக மனைவி மற்றும் மகளின் இறுதி சடங்குகளில் இருக்க முடியாது என்று நம்புவதாக கூறியுள்ளார்.