விஷப்பாம்பை ஏவி மனைவி கொலை!… இதற்காக தான் செய்தேன்- கணவனின் திடுக்கிடும் வாக்குமூலம்!!

1078

கேரளாவில் விஷப்பாம்மை ஏவி மனைவியை கொன்ற வழக்கில் கணவன் ஊடகத்தினரிடம் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்தவர் உத்ரா. இவரது கணவன் சூரஜ், இருவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு வயதில் மகனும் இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த மார்ச்-2 ம் திகதி முதல்முறையாக உத்ராவை பாம்பு கடித்தது, உயிருக்கு போராடிய மகளை அவர்களது பெற்றோர் மீட்டுக் கொண்டு வந்து தங்கள் வீட்டில் வைத்துள்ளனர். அந்த வீட்டுக்குதான் மே 7 ம் திகதி சூரஜ் சென்றிருக்கிறார். திரும்பவும் பாம்பை ஏவிவிட்டு மனைவியை கொன்றிருக்கிறார் சூரஜ்.

மகளின் மரணத்தில் சந்தேகம் இருந்ததால் உத்ராவின் தந்தை கொடுத்த புகாரின் பெயரிலேயே சூரஜ் கைது செய்யப்பட்டார். விசாரணையில் தெரியவந்த தகவல்கள் பின்வருமாறு,


சூரஜ் வனவிலங்கு ஆர்வலர்கள் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்துள்ளார். உத்ராவை கொலை செய்வதற்காக கூகுளில் பாம்புகளை தேடி உள்ளதோடு, பாம்புகளை பிடிப்பவர்களையும் தேடியுள்ளார். இறுதியில் பாம்புகளை லாவகமாக கையாளும் சுரேஷ் என்பவரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அவரிடம் ஐடியாக்களை பெற்றுக் கொண்டு, அணலி என்ற ஒரு விஷபாம்பை வாங்கி உத்ரா வீட்டுக்கு முதல் முறை சென்றுள்ளார்.

அந்த முயற்சி தோல்வியடைந்ததும், 2வதுமுறையாக 10 ஆயிரம் கொடுத்து கருமூர்க்கன் என்ற இன்னொரு விஷ பாம்பை வாங்கி கொண்டு உத்ரா வீட்டுக்கு சென்றுள்ளார். எலி தொல்லை இருப்பதாக சொல்லியே இந்த 2 பாம்புகளையும் 10 ஆயிரம் ரூபாய் தந்து சுரேஷிடம் இருந்து வாங்கி உள்ளார்.

கடந்த 6ம் தேதி ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் போட்டு கொண்டுதான் இந்த கருமூர்க்கன் பாம்பை உத்ரா வீட்டுக்கு கொண்டு சென்றதோடு, அவர் தூங்கும்போது, அந்த பாம்பை அவர் மீது தூக்கி வீசியுள்ளார். 2 முறை அந்த பாம்பு உத்ராவை கொத்தி உள்ளது.

வாய் பேச முடியாத உத்ராவால் கத்தி அலறகூட முடியவில்லை.. படுக்கையிலேயே உயிர் பிரிந்துவிட்டது.. பாம்பு கடிப்பதையும், உத்ரா துடிப்பதையும் பார்த்து கொண்டே நின்றிருக்கிறார் சூரஜ். துடிதுடித்து உத்ரா இறப்பதையும் பார்த்து கொண்டே நின்ற சூரஜ், அந்த ரூமிலேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்துள்ளார்.

புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் விடிகாலைதான் அங்கிருந்து கிளம்பியுள்ளார்.. போகும்போது பாம்பு கொண்டு வந்த பாட்டிலை வெளியே வீசிவிட்டு போயிருக்கிறார். முதலில் தன்னை பொலிசார் சிக்கவைப்பதாகவும் தெரிவித்த சூரஜ், தன் மனைவியை தானே கொன்றதாக ஊடகத்தினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் சாட்சிகளை கண்டறிய வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தெரிவித்துள்ள பொலிசார் இன்சூரன்ஸ் பணத்திற்காகவே தனது மனைவியை சூரஜ் கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். கொலை நடப்பதற்கும் சில நாட்கள் முன்னால்தான் மனைவி பெயரில் இன்சூரன்ஸ் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.