வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம மரணம்!!

98

தேனி அல்லிநகரம் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தவர் லீலாவதி (37). இன்று காலை அவர் தனது வீட்டில் இறந்து கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அல்லிநகரம் போலீசார் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் லீலாவதியின் கணவர் சின்னசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும்,

அதன் பிறகு லீலாவதி தனது மகள் கௌசல்யாவை திண்டுக்கல் மாவட்டம் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த பிச்சைமுத்து என்பவருக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் தெரியவந்தது. மேலும், கவுசல்யா, பிச்சைமுத்து தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

கணவரை பிரிந்த கௌசல்யா, தேனியில் உள்ள தாய் லீலாவதி வீட்டில் தங்கி ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார்.


இதற்கிடையில் அடிக்கடி அல்லிநகரம் வரும் பிச்சைமுத்து, மனைவி கவுசல்யா மற்றும் மாமியார் லீலாவதியிடம் தகராறு செய்து தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், லீலாவதியை பிச்சைமுத்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.