வெளிநாட்டில் 2 ஆண்டுகளாக லொட்டரி டிக்கெட் வாங்கி வந்த இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்! அவர் சொன்ன ரகசியம்!!

449

லொட்டரி டிக்கெட்……….

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக அதிர்ஷ்டத்தை நம்பி லொட்டரி டிக்கெட் வாங்கி வந்த இந்தியர் தற்போது 10 மில்லியன் திர்ஹாம் வென்றுள்ளார்.

30 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு 5 வயதில் பெற்றோருடன் வந்தவர் Gurpreet Singh. கடந்த 30 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

குழந்தைகள் மற்றும் மனைவியுடன் இவர் தற்போது ஷார்ஜாவில் வசித்து வருகிறார். பொறியாளரான இவர் கடந்த 12-ஆம் திகதி Big Ticket Abu Dhabi-க்கான குலுக்கல் லொட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார்.

இதற்கான குலுக்கலில் இவருடைய டிக்கெட் எண்ணான 067757 விழுந்துள்ளதால், இவர் 10 மில்லியன் திர்ஹாம்(இந்திய மதிப்பில் 19,99,90,874 கோடி ரூபாய்) வென்றுள்ளார்.


இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் அவரை தொடர்பு கொண்ட போது, இந்த ஐக்கிய அரபு அமீரகம் எனக்கு எல்லாவற்றையு கொடுத்துள்ளது. இப்போது இது நம்ப முடியாத ஒன்று என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த பணத்தை வைத்து என்ன செய்வது என்பது குறித்து இப்போதைக்கு திட்டம் இல்லை. ஆனால் இதில் பெரும் பகுதி நிச்சயமாக சேமிக்கு செல்லும் என்று கூறியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் பிக் டிக்கெட் வாங்குவதாக கூறும் இவர், இதைக் கேட்டு சற்று அதிர்ச்சியடைந்ததாகவும், ஆச்சரியப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Gurpreet Singh அனைவரையும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள், நீங்களும் அதிர்ஷ்டசாலி ஆகலாம், நீங்கள் கனவு காணும்போது, ​​பெரியதாக கனவு காணுங்கள் என்ற ரகசியத்தை கூறியுள்ளார்.