வெளிநாட்டில் ஆண் நண்பருடன் குடும்பம் நடத்திய புதுமாப்பிள்ளை!… இளம்மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

893

ஆந்திராவில் ஓரினச்சேர்க்கையாளராக வாழ்ந்து வந்த புதுமாப்பிள்ளையின் செயல் அம்பலமானதால் இளம்பெண் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த 30 வயதான பாஸ்கர் என்ற இளைஞர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு திருமணம் செய்ய நினைத்த பெற்றோர், அதே ஊரை சேர்ந்த 25 வயதான பெண்ணை பேசி நிச்சயம் முடித்துள்ளனர். இந்நிலையில் பாஸ்கருக்கும், அந்த பெண்ணுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

திருமணத்தின் போது 50 லட்சம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் 70 சவரன் நகைகளை பெண் வீட்டார் வழங்கினர்.

மணமகள் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் பல கனவுகளுடன் இல்லற வாழ்க்கையில் அடியெடுத்த வைத்த அந்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனக்கு உடல்நிலை சரியில்லை உட்பட பல காரணங்களை கூறி புது மனைவியிடம் பழகுவதை தவிர்த்துள்ளார் பாஸ்கர்.


ஒன்றரை மாதங்களாக இது தொடரவே, ஏமாற்றமடைந்த அப்பெண் தன்னுடைய பெற்றோரிடம் விடயத்தை கூறியுள்ளார்.

உடனடியாக பாஸ்கரிடம் விசாரித்த போது மழுப்பலாக பதிலளித்துள்ளார், அதில் பாஸ்கரை அழைத்து பேசியவர்கள், திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண் பிடிக்கவில்லையா? என கேட்க அதற்கு சரியான பதில் கூறாமல் அவர் தட்டி கழித்துள்ளார்.

இறுதியில் உண்மையை ஒப்புக்கொண்டார், அதாவது அமெரிக்காவை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் 4 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வருவதாகவும், பெண்கள் மீது தனக்கு மோகம் இல்லை எனவும் கூறினார்.

ஒருகட்டத்தில், தன்னுடன் மனைவியை அமெரிக்காவுக்கு அழைத்து சென்றால் ஆண் நண்பருக்கும் மனைவியாக வாழ வேண்டும் என கூறி கூடுதல் அதிர்ச்சியளித்துள்ளார்.

இதனையடுத்து பெண்ணின் வீட்டார் குண்டூர் புறநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.