வேறொரு நபருடன் நெருக்கம்.. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்த இளம்பெண்.. விரக்தியில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

89

சென்னை, கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார், 24. இவர் சொந்தமாக சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி கணவரை பிரிந்து வசித்து வந்த பெண்ணை சந்தித்தார்.

பின்னர் இருவரும் 6 மாதங்களாக காதலித்து வந்தனர். அந்த பெண்ணும், தனது கணவரும் விவாகரத்து செய்யப் போவதாகவும், அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் அந்த பெண் பிரேம்குமாரிடம் கூறியிருந்தார்.

இந்நிலையில், அந்த பெண், வேறொரு இளைஞனுடன் இருக்கும் புகைப்படத்தை, ‘வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில்’ வைத்திருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரேம்குமார் அந்த வாலிபர் யார் என்று அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த இளம்பெண், நான் அவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகு, அந்த பெண் பதிலளிக்காமல் பிரேம்குமாரின் செல்போன் அழைப்புகளையும் துண்டித்துவிட்டார்.

இதனால் விரக்தியடைந்த பிரேம்குமார் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பின் வீட்டின் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முன்னதாக, தனது ‘வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில்’ பெண்ணின் செல்போன் எண்ணை பதிவிட்டு தனது தற்கொலைக்கான காரணம் இவர் என பதிவிட்டுள்ளார். இந்த தற்கொலை குறித்து ஆர்.கே. நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.